சினிமா செய்திகள்
சமந்தா

புதிய கவர்ச்சி உடையில் சமந்தா... வைரலாகும் புகைப்படம்

Update: 2022-05-08 07:17 GMT
சமந்தா எல்லைமீறும் கவர்ச்சியில், அட்டை படத்திற்கு போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தன் விடா முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கணவர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து விட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டத்துக்கும் கண்டனங்கள் எழுந்தன. பாடல் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.


சமந்தா

முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் சமந்தா தற்போது கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சமந்தா சமூகத்தளங்களிலும் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. 


சமந்தா

தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் சமந்தா பாலிவுட் பக்கம் பிசியாக உள்ளார். அதுமட்மின்றி, ஹாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார். இதனை தொடர்ந்து சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யசோதா திரைப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இணையத்தில், அவ்வப்போது வலம் வரும் ரசிகர்களை குஷியாக்க இவர் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். 


சமந்தா

தற்போது, சமந்தா எல்லைமீறும் கவர்ச்சியில், அட்டை படத்திற்கு போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
Tags:    

Similar News