சினிமா செய்திகள்
டான் - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் கொடுக்கும் பிரைவேட் பார்ட்டி

Update: 2022-04-30 05:17 GMT
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தில் இடம்பெற்றுள்ள பிரைவேட் பார்ட்டி பாடல் வெளியாகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 


டான் - சிவகார்த்திகேயன்

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 'டான்' திரைப்படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் எழுதியுள்ள டான் திரைப்படத்தின் 3வது பாடலான ‘பிரைவேட் பார்ட்டி’ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News