சினிமா செய்திகள்
சூர்யா

சூர்யா படம் குறித்து பதிவிட்ட கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ்

Update: 2022-04-21 10:18 GMT
பிரபல தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ், சூர்யா படம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர்.


ஜாண்டி ரோட்ஸ்

நடிகர் அருண் விஜய் மகன் அர்னவுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 'ஓ மை டாக்' திரைப்படம் இன்று (21.04.2022) நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்து ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ஜாண்டி ரோட்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் செல்லப்பிராணி விரும்பியாக, இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பகிர்ந்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சூர்யா, மிக்க நன்றி!! உங்களின் பெரிய ரசிகர் நான். உங்கள் மகளுக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவருக்கு பதில் பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த உரையாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News