சினிமா செய்திகள்
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தில் மீண்டும் குத்தாட்டம், ஆனால் அதில் சமந்தா இல்லை என்று கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கிய திரைப்படம் புஷ்பா. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக மாறியது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.
திஷா பதானி
வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்துப் பாடல் இடம்பெறுவுள்ளது. இந்நிலையில் அந்த பாடலுக்கு சமந்தாவுக்குப் பதிலாக, பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடனம் ஆட இருப்பதாகக் கூறப்படுகிறது.
திஷா பதானி
புஷ்பா இரண்டாம் பாகம் இந்தி ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் எடுக்கப்படுவதாகவும், முதல் பாகத்தின் பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.