சினிமா செய்திகள்
வலிமை

வசூலில் புதிய சாதனை படைத்த வலிமை

Update: 2022-03-24 10:23 GMT
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட வலிமை படத்தின் வசூலை தயாரிப்பாளர் போனி கபூர் பதிவிட்டுள்ளார்.
அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகமுழுவதும் வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இப்படத்தின் வசூலை பற்றி ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.


வலிமை

இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், வலிமை படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News