சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் - மு.க.ஸ்டாலின்

பாராட்டிய ரஜினிகாந்த்.. நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2022-03-24 07:00 GMT
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் நூலை படித்து பாராட்டிய ரஜினிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான 'உங்களில் ஒருவன்' சமீபத்தில் வெளியிட்டப்பட்டது. சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த வெளியீட்டு விழாவில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த புத்தகத்தை எழுதிய முதல்வர் ஸ்டாலினை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த புத்தகத்தை படித்த நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். 


ரஜினிகாந்த் - மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் ரஜினியின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News