சினிமா செய்திகள்
கமல்ஹாசன்

நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உள்பட 9 பேர் நியமனம்

Update: 2022-03-23 09:41 GMT
தேர்தலில் வெற்றிப்பெற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள் நேற்று நடைப்பெற்ற விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை எளிமையாக நடத்தினர். விழாவில் தலைவர் நாசர் முன்னிலையில் எல்லோரும் பொறுப்பேற்றுக்கொண் டனர். இனி நடிகர் சங்கத் தின் சார்பாக ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவும், சங்கத்திற்கு தேவையான நிதியை திரட்டவும், பாதியில் நிற்கும் கட்டிடத்தை கட்டி முடிக்கவும் உறுதி கொண்டுள்ளனர்.


நாசர்


இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் அறங்காவலர் ளாக கமல்ஹாசன் உள்பட 9 பேரை நியமித்திருக்கிறார்கள். இந்தக்குழுவின் நிர்வாக அறங்காவலராக நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக கமல் ஹாசன், சச்சு, லதா, நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், ராஜேஷ், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News