சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி

ரசிகர்களை குழப்பிய விஜய் ஆண்டனி

Update: 2022-03-13 06:08 GMT
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்ததோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவித்தனர். 

முதல் பாகத்தை இயக்கிய சசி, வேறு படவேலைகளில் பிசியாக இருப்பதால் இரண்டாம் பாகத்தை பாரம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி இயக்க உள்ளதாக கடந்தாண்டு அறிவித்தனர். பின்னர் சில காரணங்களால், பிரியா கிருஷ்ணசாமியும் இப்படத்தில் இருந்து விலகினார். 


விஜய் ஆண்டனி

அதன்பின் இப்படத்தை தானே இயக்க உள்ளதாக விஜய் ஆண்டனி அதிரடியாக அறிவித்தார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடிப்பதோடு இசை, படத்தொகுப்பு, தயாரிப்பு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கிறார்.

சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் திரைதுறையினர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்திய "பிகிலி யோட எதிரி யாரு" என்ற போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இதனை அறிவிக்கும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதன்படி இந்த போஸ்டர் 'பிச்சைக்காரன் 2' படத்துடையது என்றும், அந்த ஆண்டி பிகிலி நான் தான் என்று தெரிவித்துள்ளார். இதன் புதிய போஸ்டரை வெளியிட்ட விஜய் ஆண்டனி, நான்தான் 'ஆன்டிபிகிலி' அப்போ பிகிலி யாரு என்று புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். Tags:    

Similar News