சினிமா செய்திகள்
வலிமை படத்தில் அஜித்

வலிமை படக்குழுவினருக்கு நோட்டீஸ்

Update: 2022-03-12 06:44 GMT
போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படத்தின் கதை பிரச்சனையால் சென்னை ஜகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் மெட்ரோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்தை தயாரித்த ஜெயகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ‘மெட்ரோ படத்தில் வசதியான வாழ்வுக்காக சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தலில் தம்பி ஈடுபடுவதை அறிந்துகொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சி அமைக்கப்பட்டது. மெட்ரோ படத்தை இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் வலிமை படம் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் எனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியுள்ளார்.


போனி கபூர் - எச்.வினோத்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வருகிற 17-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் வினோத் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News