சினிமா செய்திகள்
சூர்யா

பிரபல இயக்குனருடன் இணையும் சூர்யா

Update: 2022-03-04 11:19 GMT
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை பிரபல இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.


ராம்குமார்

இதனை தொடர்ந்து சூர்யா அடுத்து நடிக்க இருக்கும் படம் குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இயக்கிய ராட்சசன் திரைப்படம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
Tags:    

Similar News