சினிமா செய்திகள்
அருண்ராஜா காமராஜ்

ரஜினியின் 170-வது படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்?

Update: 2022-02-20 10:09 GMT
சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்த்தின் 169-வது படத்தை தொடர்ந்து 170-வது படத்தை பிரபல இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். அதன்பின் வெளியான 169-வது திரைப்படத்தின் அறிவிப்பை அனைவரும் கொண்டாடி வந்தனர். ’தலைவர் 169’ என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ”கோலமாவு கோகிலா”, ”டாக்டர்” போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.


அருண்ராஜா காமராஜ்

169-வது பட அறிவிப்பின் சூடு தனிவதற்குள் 170-வது அறிவிப்பை பற்றி ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர். இப்படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை இயக்கியுள்ள நடிகரும், பாடலாசிரியரும், இயக்குனருமான அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும் இதனை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Tags:    

Similar News