சினிமா செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் படத்தின் புதிய அப்டேட்

Published On 2022-02-10 10:09 GMT   |   Update On 2022-02-10 10:10 GMT
ஆர்டிக்கள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.
2019-இல் அனுபவ் சின்ஹா இயக்கி தயாரித்து வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இப்படம் இந்தி மொழியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ‘நெஞ்சுக்கு நீதி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 


ஆர்டிக்கள் 15

இப்படத்தின் டீசர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.02.2022) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவால் டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் புதிய டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் நாளை(11.02.2022) மதியம் 12.20 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News