சினிமா செய்திகள்
பீஸ்ட்

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ படைத்த புதிய சாதனை

Update: 2022-02-09 06:22 GMT
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பர்ஸ்ட் சிங்கள் புரமோ

பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை நேற்று படக்குழு வெளியிட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் சிங்கள் புரமோ 1 கோடி பார்வையாளர்களை கடந்தும், 10 லட்சம் லைக்குகள் வாங்கியும் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


Tags:    

Similar News