சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

Update: 2022-02-02 11:22 GMT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


காத்துவாக்குல ரெண்டு காதல்

இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருக்கிறார். அதன்படி 'காதுவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டீசர் வரும் 11.02.2022 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.Tags:    

Similar News