சினிமா செய்திகள்
விஷ்ணு விஷால்

'எப்.ஐ.ஆர்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

Published On 2022-02-01 03:10 GMT   |   Update On 2022-02-01 03:10 GMT
நடிகர் விஷ்ணு விஷால் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எப்.ஐ.ஆர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்த விஷ்ணு விஷால் அடுத்து நடித்துள்ள திரைப்படம் எப்.ஐ.ஆர். இந்த படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'எப்.ஐ.ஆர்'. மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.


எப்.ஐ.ஆர்

ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 11-ந்தேதி 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக முதலில் ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது.

இப்படத்தை  நடிகர் உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்வது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News