தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி வளர்பிறை என்னும் குறும்படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்.
வளர்பிறை - யை வாழ்த்திய விஜய் சேதுபதி
பதிவு: ஜனவரி 21, 2022 17:15 IST
விஜய் சேதுபதி
சமீபகாலமாக குறும்படங்கள் சினிமா எடுப்பதற்கு முன் பயிற்சி பட்டறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான "வளர்பிறை" என்ற குறும்படம் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான நிறைய விருதுகளை வாங்கி குவித்துள்ளது.
இந்த வளர்பிறை குறும்படத்தை திரைப்பட விழாக்களில் பார்த்த ஒரு அமெரிக்கர் அந்த குறும்படத்தை தன் சொந்த யூடியூப் சேனலுக்காக வாங்கி இருக்கிறார். இந்த குறும்படத்தை பார்த்த விஜய் சேதுபதி, படக்குழுவினரை பாராட்டி, குறும்படத்தினை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
Related Tags :