தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் சுந்தர் சி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் சி
பதிவு: ஜனவரி 21, 2022 16:40 IST
சுந்தர் சி
24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.திருஞானம் எழுதி இயக்கும் படம் "ஒன் 2 ஒன்". சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சுந்தர் சியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன் 2 ஒன் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். படப்பிடிப்பில் கலந்து கொண்ட சுந்தர் சி கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்து கூறிய அனைருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தனது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் சுந்தர் சி கொண்டாடியது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :