சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், உருவாகும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்து இருக்கிறார்.
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல நடிகை
பதிவு: ஜனவரி 20, 2022 20:44 IST
விஜய் சேதுபதி
நடிகர் சந்தீப் கிஷன் “மைக்கேல்” என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார். மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
">
">வரலட்சுமி
இப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
Related Tags :