விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சிங்கத்தை கொல்ல முடியாது - வீரமே வாகை சூடும் டிரைலர்
பதிவு: ஜனவரி 19, 2022 17:35 IST
விஷால்
விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Related Tags :