சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் திரும்பியுள்ள நிலையில் யாஷிகா ஆனந்த் புதிய போட்டோ ஷூட் ஒன்றை அளித்துள்ளார்.
வொண்டர் வுமன் ஸ்டைலில் யாஷிகா ஆனந்த்... வைரலாகும் புகைப்படம்
பதிவு: ஜனவரி 19, 2022 16:26 IST
மாற்றம்: ஜனவரி 20, 2022 08:53 IST
யாஷிகா ஆனந்த்
துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டுக்குத்து போன்ற படங்களில் நடித்திருந்தாலும் நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமாகி விட்டார். சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா, நீண்ட சிகிச்சை எடுத்து திரும்பினார். தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து வரும் யாஷிகா ஆனால் தற்போது கையில் வாளுடன் வொண்டர் வுமன் ஸ்டைலில் போட்டோசூட் எடுத்து அதை பதிவு செய்து இருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
Related Tags :