சபரிமலை ஐயப்பனை பற்றி தமிழிலும், மலையாளத்திலும் பல பக்தி பாடல்கள் பாடிய இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் கொரோனாவால் மரணம் அடைந்தார்.
பிரபல இசையமைப்பாளர் கொரோனாவால் மரணம்
பதிவு: ஜனவரி 18, 2022 18:41 IST
ஆலப்பி ரங்கநாத்
பிரபல பழம்பெரும் மலையாள இசையமைப்பாளர் ஆலப்பி ரங்கநாத் கொரோனாவால் மரணம் அடைந்தார். இவருக்கு சமீபத்தில் சபரிமலையில் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆலப்பி ரங்கநாத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கோட்டயத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. ஆலப்பி ரங்கநாத் மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த முதல் படமான ஜீசஸ் 1973-ல் வந்தது. 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். சபரிமலை ஐயப்பனை பற்றி தமிழிலும், மலையாளத்திலும் பல பக்தி பாடல்கள் பாடி உள்ளார்.
Related Tags :