பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய தகவல்
பதிவு: ஜனவரி 18, 2022 16:53 IST
சூர்யா
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பாண்டியராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிப்ரவரி 4-ஆம் தேதி இப்படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தணிக்கைத்துறை இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. அதோடு இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டிருக்குது.
Related Tags :