தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக விளங்கும் விஜய் சேதுபதியின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்திய கமல்ஹாசன் இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தேடலும் துணிச்சலும் வீண் போகாது - விஜய் சேதுபதியை வாழ்த்திய கமல்
பதிவு: ஜனவரி 16, 2022 16:08 IST
விஜய் சேதுபதி - கமல் ஹாசன்
சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி பிறகு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகனாக மக்கள் மனதில் பதிந்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு நிகரான இடத்தில் தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார். இவர் தற்போது விஜேஎஸ்46, விடுதலை, விக்ரம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.
16 ஜனவரி அன்று விஜய் சேதுபதி அவர்களுக்கு பிறந்தநாள், இந்த பிறந்தநாளில் அவருக்கு திரைதுறையினர் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் விஜய் சேதுபதிக்கு அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, ”சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி. கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என அந்த பதிவின் மூலமாக கமல்ஹாசன் அவருடைய வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
Related Tags :