தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை தயாரித்த எம்.முத்துராமன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எம்.முத்துராமன் காலமானார்
பதிவு: ஜனவரி 11, 2022 08:26 IST
எம்.முத்துராமன்
ராஜமரியாதை, மூடுமந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கல் போன்ற பல படங்களை எம்.முத்துராமன் தயாரித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்கள் தயாரித்து தவிர்க்க முடியாத தயாரிபாளராக வலம் வந்த இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். எம். முத்துராமனின் மறைவிற்கு திரைதுறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவர் தயாரித்த ஒரு வீடு ஒரு மனிதன் படம் சிறந்த படத்திற்கான மாநில விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :