சினிமா செய்திகள்
கமல்

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

Update: 2022-01-08 12:48 GMT
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
நடிகர் கமல் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய், சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர்.


தாமரை

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேறுவார். அதன்படி இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். சென்ற வாரம் 12 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு சிபி வெளியே சென்று விட்டார். தற்போது 6 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இந்த வாரம் தாமரை வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News