சினிமா
ரஜினிகாந்த்

நாளை விருது பெறுவதை தவிர இன்னொரு முக்கிய நிகழ்வு இருக்கு - ரஜினி திடீர் அறிக்கை

Published On 2021-10-24 07:07 GMT   |   Update On 2021-10-24 07:07 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி, தனது மகள் செளந்தர்யா குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு நாளை டெல்லியில் நடைபெறும் விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், நாளை விருது பெறுவதை தவிர தனக்கு, மற்றுமொரு முக்கிய நிகழ்வு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்கவுள்ளது. 


ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை

இரண்டாவது, என்னுடைய மகள் செளந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய "HOOTE” என்கிற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். 

அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் "HOOTE APP" மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான "HOOTE APP"-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News