சினிமா
தர்ஷா குப்தா - ரிச்சர்ட்

ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2021-09-16 13:50 GMT   |   Update On 2021-09-16 13:50 GMT
திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே குழுவினர் இணைந்திருக்கும் ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘திரெளபதி’. இப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்.ஜி அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். 

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தை அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
Tags:    

Similar News