அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.
அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?
பதிவு: செப்டம்பர் 16, 2021 11:22 IST
ஷாருக்கான், அட்லீ
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கும் இந்தி படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
மேலும் பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘லயன்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்திற்கு ஜவான் என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது லயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :