சினிமா
துருவ் விக்ரம்

தாதாவாக மாறிய துருவ் விக்ரம்

Published On 2021-09-10 08:20 GMT   |   Update On 2021-09-10 08:20 GMT
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் விக்ரம், தற்போது தாதாவாக மாறி இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ‘சியான் 60’ என்று அழைத்து வந்த இப்படத்திற்கு ‘மகான்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.



தற்போது துருவ் விக்ரம் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் அதற்கான வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தாதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் துருவ் விக்ரமின் போஸ்டர் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News