ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக தயாராவதாக கூறப்படுகிறது.
ஷங்கர் - ராம்சரண் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?
பதிவு: செப்டம்பர் 09, 2021 12:30 IST
ஷங்கர், ராம்சரண்
ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ராம்சரண், அடுத்ததாக இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், இப்படத்திற்கு ‘விஸ்வம்பரா’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ‘விஸ்வம்பரா’ என்றால் பூமி என்று அர்த்தமாம்.
அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் ராம்சரண் இளம் அரசியல் தலைவராக நடிப்பதாக கூறப்படுகிறது. தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
Related Tags :