சினிமா
லாபம் படத்தில் விஜய் சேதுபதி

லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2021-08-25 12:55 GMT   |   Update On 2021-08-25 12:55 GMT
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜெகபதிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’.
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருந்தது.



கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் வெளியிட்டு தேதி அறிவிக்காமல் இருந்தனர். தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், லாபம் படத்தை செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Tags:    

Similar News