சினிமா
மனைவியுடன் பிரகாஷ் ராஜ்

மீண்டும் திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.... வைரலாகும் புகைப்படம்

Published On 2021-08-24 16:58 GMT   |   Update On 2021-08-24 16:58 GMT
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ், மீண்டும் திருமணம் செய்துள்ளார்.
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை லலிதா குமாரியை 1994 இல் திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ். இவர்களின் திருமண வாழ்க்கை 2009 இல் முடிவுக்கு வந்தது.

பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டபின் 2010 இல் போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இன்று அவர்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாள். இதனை முன்னிட்டு மனைவிக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.



தற்போது தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில், இன்றிரவு நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். என் மகன் வேதந்த் எங்கள் திருமணத்தை பார்க்க விரும்பியதால் அவன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது என்று பிரகாஷ் ராஜ் பதிவு செய்து இருக்கிறார்.
Tags:    

Similar News