சினிமா
மனைவியுடன் பிரகாஷ் ராஜ்

மனைவிக்கு நன்றி சொன்ன பிரகாஷ் ராஜ்

Published On 2021-08-24 12:44 GMT   |   Update On 2021-08-24 12:44 GMT
தனது 11 வது ஆண்டு திருமணநாளை முன்னிட்டு நெகிழ்ச்சி பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பிரகாஷ் ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

தனது ஆரம்பகால திரைவாழ்க்கையில் சிரமத்தை சந்தித்தபோது உதவிய நடிகை லலிதா குமாரியை பிரகாஷ்ராஜ் 1994 இல் திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ்.
இவர்களின் திருமண வாழ்க்கை 2009 இல் முடிவுக்கு வந்தது. 

பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டபின் 2010 இல் போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இன்று அவர்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாள். அதனை முன்னிட்டு, ட்விட்டரில் ஒரு பதிவை பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார்.



அதில், சிறந்த தோழியாகவும், காதலியாகவும், சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருக்கிற தனது அன்பு மனைவிக்கு நன்றி என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். 
Tags:    

Similar News