சினிமா
கமல்ஹாசன், இந்தியன் 2 படத்தின் போஸ்டர்

‘இந்தியன் 2’ பிரச்சனை என்ன ஆனது? - மவுனம் கலைத்த கமல்

Published On 2021-08-22 12:53 GMT   |   Update On 2021-08-22 12:53 GMT
‘இந்தியன் 2’ விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன், சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி வந்தார்.

இதனிடையே, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 


கமல்ஹாசன்

இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன், சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “‘இந்தியன் 2’ படத்தின் 60 சதவீத காட்சிகள் முடிவடைந்துள்ளது. இப்படத்தை சுற்றியுள்ள பிரச்சனைகள் கூடிய விரைவில் முடிக்கப்பட்டுவிடும். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘இந்தியன் 2’ பட பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News