சினிமா
வாத்தி கம்மிங் பாடலில் விஜய்

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய சார்பட்டா பிரபலம்.... வைரலாகும் வீடியோ

Published On 2021-08-17 12:29 GMT   |   Update On 2021-08-17 12:29 GMT
விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வாத்தி கம்மிங் பாடலுக்கு சார்பட்டா படத்தின் பிரபல நடிகர் ஒருவர் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக இதில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.


டான்சிங் ரோஸ் என்கிற சபீர்

வாத்தி கம்மிங் பாடல் வீடியோ, யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. பல சினிமா பிரபலங்களும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சபீர், வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News