சினிமா
அரவிந்த் சாமி

கோபத்தை நான்தான் தேர்ந்தெடுத்தேன் - அரவிந்த்சாமி

Published On 2021-08-11 15:52 GMT   |   Update On 2021-08-11 15:52 GMT
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என்று கலக்கி வரும் அரவிந்த் சாமி, இயக்குனரான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் கோபத்தை மையப்படுத்தி உருவான ரௌத்திரம் பகுதியை அரவிந்த் சாமி இயக்கி இருந்தார்.

இயக்குனராக அறிமுகமானது குறித்து அரவிந்த் சாமி கூறும்போது, ‘90-களின் ஆரம்பத்தில் இருந்தே இயக்கத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. நவரசா குறித்து மணி ரத்னம் என்னுடன் பேசியபோது நான் அதில் பங்கேற்க முடியுமா, எனக் கேட்டார். நான் அவரிடம் இயக்குனராகவா அல்லது நடிகராகவா எனக் கேள்வி எழுப்பினேன். அது உன்னுடைய தேர்வு தான் என்று கூறிவிட்டார். இப்படித்தான் இயக்குனராக எனது பயணம் துவங்கியது. 

இயக்குனராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் எந்த சந்தேகமோ, தயக்கமோ, என்னிடம் சுத்தமாக இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்தது தான் அதற்கு காரணம். அவர்கள் தான் என் வழிகாட்டி. 



ஆந்தாலஜியில் கோபத்தை நான் தான் தேர்ந்தெடுத்தேன். அதற்கு காரணம் வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய, கோபம் ஏற்றதாக இருக்குமென்று நினைத்தேன். ஒரு ஐடியா என்னுள் தோன்றியது. கோபம் கிடைத்தால், அதை முன்வைத்து ஒரு கதையை கூறலாம் என்று முடிவு செய்தேன். அது நிறைவுபெற்று, இப்போது எனது படைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது’ என்றார்.
Tags:    

Similar News