சினிமா
கமல்

62 ஆண்டுகளை கடந்த கமல்... புதிய போஸ்டர் வெளியிட்ட விக்ரம் படக்குழு

Published On 2021-08-11 13:22 GMT   |   Update On 2021-08-11 15:13 GMT
நடிகர் கமலின் 62 ஆண்டுகள் சினிமா பயணத்தை வாழ்த்தும் விதமாக விக்ரம் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
சினிமா உலகில் 62 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். தற்போது கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கமலின் 62 ஆண்டுகள் சினிமா பயணத்தை வாழ்த்தும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். கையில் பெரிய வாளுடன் கமல் நிற்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


விக்ரம் படத்தின் புதிய போஸ்டர்

விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
Tags:    

Similar News