சினிமா
அட்லீ, ஷாருக்கான்

ஷாருக்கான் படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட தயாராகும் அட்லீ

Update: 2021-08-05 11:10 GMT
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படத்தை இயக்க உள்ளார்.
ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் அப்படத்தின் டீசரையும் வெளியிட உள்ளார்களாம். இப்படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை குவைத்தில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் அட்லீ. 
Tags:    

Similar News