சினிமா
சோனு சூட்

எம்.பி. வாய்ப்பை ஏற்க மறுத்த சோனு சூட்

Published On 2021-08-04 09:40 GMT   |   Update On 2021-08-04 10:32 GMT
நடிகர் சோனு சூட்டை எம்.பி. ஆக்க முயற்சி நடந்ததாகவும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக வந்த பிரபல இந்தி நடிகர் சோனுசூட், கொரோனா காலத்தில் நடைபயணமாக சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

இதையடுத்து வெளிநாடுகளில் தவித்த மாணவர்களை, தனி விமானம் அனுப்பி அழைத்து வந்தது, 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது என ஏராளமான உதவிகளை செய்தார். தனது சொத்துக்களை அடமானம் வைத்து ரூ.10 கோடி கடன் வாங்கி இத்தகைய உதவிகளை அவர் செய்ததாக கூறப்பட்டது. 


சோனு சூட்

இந்நிலையில், சோனுசூட்டை எம்.பி. ஆக்க முயற்சி நடந்ததாகவும், அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சோனு சூட்டுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, “சோனுசூட் செய்த சமூக நலப்பணிகளால் ஈர்க்கப்பட்ட ஒரு மாநில அரசு அவருக்கு ராஜ்ய சபை எம்.பி. சீட் வழங்க முன்வந்தது. 

ஆனால் சோனுசூட் அந்த வாய்பை பணிவோடு நிராகரித்தார். எந்த அரசியல் அமைப்பிலும் சார்ந்து இருக்க விரும்பவில்லை. அரசியல் கட்சிகள் சாயல் இல்லாமல் தனது பணிகளை தொடர விரும்புகிறேன் என்று சொல்லி வேட்புமனு தாக்கல் செய்ய மறுத்துவிட்டார்” என்றனர்
Tags:    

Similar News