சினிமா
ஜி.வி.பிரகாஷ்

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷ் படம்

Published On 2021-07-28 08:10 GMT   |   Update On 2021-07-28 10:40 GMT
நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள ஜி.வி.பிரகாஷ் படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘ஈட்டி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படம் ‘ஐங்கரன்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் ரிலீசாகாமல் இருந்தது.


ஐங்கரன் படத்தின் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமன்மேன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Tags:    

Similar News