சினிமா
விக்ரம் படத்தின் போஸ்டர்

கமலின் விக்ரம் படத்தில் இணையும் மேலும் ஒரு மலையாள நடிகர்

Published On 2021-07-27 03:46 GMT   |   Update On 2021-07-27 07:04 GMT
லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் விக்ரம் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கமல்ஹாசன், காளிதாஸ் ஜெயராம்

இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். 
Tags:    

Similar News