சினிமா
ஷங்கர், ராஷ்மிகா

ஷங்கர் படத்தில் ராஷ்மிகா?

Update: 2021-07-22 04:43 GMT
இயக்குனர் ஷங்கர் - தெலுங்கு நடிகர் ராம்சரண் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


ராஷ்மிகா, ராம்சரண்

இப்படத்தில் ராம்சரணுக்கு இரட்டை வேடமாம். அதனால் அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவை இரண்டாவது ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News