சினிமா
ஆண்ட்ரியா - வெற்றிமாறன்

வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா

Update: 2021-07-19 16:20 GMT
முன்னணி நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, வடசென்னை படத்தை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்திருக்கிறார்.
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இந்நிலையில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 16 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதாகவும், ஒரு பெண்ணை மையப்படுத்திய கதை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்குமுன் இயக்குனர் வெற்றிமாறன், சங்கத்தலைவன் என்ற படத்தினை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘அதிகாரம்’ திரைப்படத்துக்கான கதையை எழுதி, பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News