சினிமா
ஷங்கர்

இயக்குனர் ஷங்கருக்கு தடை இல்லை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2021-07-08 05:30 GMT
இயக்குனர் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த மற்றொரு வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்துவிட்டார். இதை எதிர்த்து லைகா தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. 


ஷங்கர்

இதன் விசாரணையின் போது, ஏற்கனவே லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல எனக்கூறி, லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
Tags:    

Similar News