சினிமா
பிரபாஸ்

பிரபாஸின் பிரம்மாண்ட படத்திற்கு செட் அமைக்க ரூ.100 கோடி செலவு செய்த படக்குழு

Published On 2021-06-23 08:49 GMT   |   Update On 2021-06-23 08:49 GMT
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படத்தை இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளனர்.
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பிரபல இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.  

அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ராதே ஷ்யாம் படத்திற்காக சுமார் 26 செட்கள் போடப்பட்டதாகவும், அதற்காக 106 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


ராதே ஷ்யாம் படத்தின் போஸ்டர்

சமீபத்தில் கொரோனா 2-வது அலை பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில், இப்படத்திற்காக போடப்பட்ட மருத்துவமனை செட் ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள படக்குழு நன்கொடையாக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News