தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் தமன்னா, பழைய தோற்றத்துக்கு திரும்ப தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
பழைய தோற்றத்துக்கு திரும்ப தீவிரமாக முயற்சி செய்யும் தமன்னா
பதிவு: பிப்ரவரி 09, 2021 20:08
தமன்னா
திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தமன்னாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் தொற்றில் இருந்து விடுபட்டு பூரண குணமடைந்துவிட்டப்போதிலும் உடல் மெலிந்து காணப்பட்டார்.
இதனால் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். பொதுவாக நடிகைகள் தங்களது உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பார். அதிலும் நடிகை தமன்னா ஒரேமாதிரியான உடல் கட்டமைப்போடுதான் இருப்பார். இதையடுத்து தன் மெலிந்த உடலை மெருகேற்ற தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அப்படி உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவுரையும் கூறி வருகிறார்.
அப்படி தினமும் உடற்பயிற்சி செய்து வரும் தமன்னா, தற்போது ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.