சினிமா
விஜய் சேதுபதி

‘லாபம்’ படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Published On 2020-12-08 04:41 GMT   |   Update On 2020-12-08 04:46 GMT
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.



இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டுக்கு பிந்தைய ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என தெரிகிறது. இப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News