தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ முடிவுக்கு வந்துள்ளது.
சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ முடிவுக்கு வந்தது
பதிவு: நவம்பர் 19, 2020 12:37
சாய் பல்லவி
மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி, விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்து வந்த ‘லவ் ஸ்டோரி’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சேகர் கம்முலா இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த ‘ஃபிடா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
Related Tags :