தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, மலையாள ரீமேக் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள ரீமேக்கில் நயன்தாரா
பதிவு: அக்டோபர் 12, 2020 20:20
நயன்தாரா
ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மஞ்சு வாரியர், ரோஷன் ஆண்ட்ரூஸ், அனுஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்த மலையாளப் படம் 'ப்ரதி பூவன்கோழி'. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் இந்தப் படம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியானது. நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தமிழ் ரீமேக் உரிமையை யார் கைப்பற்றியுள்ளார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பாலிவுட் ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றியுள்ளார். முன்னணி நடிகையை வைத்து பாலிவுட்டில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
பேருந்துப் பயணத்தில் தன்னைத் தொட்ட ஒருவனை பெண் எப்படி பழிவாங்கினார் என்பது தான் 'ப்ரதி பூவன்கோழி' படத்தின் கதையாகும். தமிழ் ரீமேக்கில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
Related Tags :