தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பரிகார பூஜைக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பரிகார பூஜைக்காக காத்திருக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்
பதிவு: ஆகஸ்ட் 18, 2020 20:53
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் 2019 முடிந்து 2020 தொடங்கி கொரோனா தடையும் 5 மாத காலம் அமலான நிலையில் அவர்கள் திருமண பேச்சு கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.
நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடியவதற்குள் அடுத்த 2021ம் ஆண்டும் முடிந்துவிடும் அப்படியென்றால் திருமணம் எப்போது என்று மறுபடியும் ஒரு கேள்வியுடன் ஜோதிடரை குடும்பத்தினர் அணுகிக் கேட்ட போது ஒருமுறை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக திருநாகேஸ்வரம் சென்று பரிகார பூஜை செய்து வந்தால் திருமணம் நிச்சயம் என்று கூறி உள்ளனர்.
கொரோனா ஊரடங்கில் கோயில் தரிசனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்தபின் அவர்கள் தரிசனம் செய்யக் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார்களாம். அதன்பிறகு திருமண அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.
Related Tags :